என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விசாரணை அறிக்கை
நீங்கள் தேடியது "விசாரணை அறிக்கை"
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TrumpCampaign #Trump #USElection
வாஷிங்டன்:
இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் அவர் இருந்து நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லரிடம் வழங்கப்பட்டது.
ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பாராளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார். வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக பாராளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே அறிக்கையின் முழு விவரம் தெரியவரும்.
அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷியர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கு உதவ ரஷியர்கள் பலர் முன்வந்தபோதும் சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். #TrumpCampaign #Trump #USElection
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணை நடத்தி வந்தார். பின்னர் அவர் இருந்து நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லரிடம் வழங்கப்பட்டது.
ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பாராளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார். வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக பாராளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே அறிக்கையின் முழு விவரம் தெரியவரும்.
அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷியர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கு உதவ ரஷியர்கள் பலர் முன்வந்தபோதும் சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். #TrumpCampaign #Trump #USElection
கால்டாக்சி டிரைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதை போல போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
வேலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ், கடந்த மாதம் 25-ந்தேதி, மறைமலை நகர் ரெயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், அதற்கான காரணம் என்ன? என்பதை விவரித்து பேசி இருந்தார்.
அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில் சென்னை போலீசே எனது சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.
சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்த போது, போலீசார் வந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு சென்னை இணை கமிஷனர் விஜயகுமாரிக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதன்படி இணை கமிஷனர் விஜயகுமார் தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் போலீசார், கால்டாக்சி டிரைவர் ராஜேசிடம், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவில் டிரைவர் ராஜேஷ் குறிப்பிட்டதை போல தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #HIVBlood
சென்னை:
சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசினார்கள்.
வி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.):- 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு இதுபோல் இனி வேறு எங்கும் நடைபெறக் கூடாது. இந்த தவறுக்கு அரசு நிர்வாகம் காரணமா? அல்லது தனிப்பட்ட நபர்களின் கவனக்குறைவு காரணமா? என்னைப் பொறுத்தவரை லேப் டெக்னீசியன் மற்றும் கண்காணிப்பாளரின் குறைபாடுகளால் நடந்திருக்கலாம் என கருதுகிறேன்.
ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கிறார்கள். இதில் பரிசோதனை செய்கிற ‘கிட்’டில் குறை இருக்குமோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு கேரளாவிலும் நடந்துள்ளது.
இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.):- கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விஷயத்தில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அரசு தீவிரமாக ஆராய்ந்து இனி வரும் காலங்களில் தவறு ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதில் ரத்தம் கொடுத்த அந்த நபர் மனசாட்சி உள்ளவராகவே தெரிகிறது. ஏனென்றால் அவரே முன் வந்து தனது ரத்தத்தில் எச்.ஐ.வி. உள்ளதாக தனியார் ஆய்வகத்தில் கூறி இருக்கிறார். எனவே எனது ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று தானே ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகுதான் விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. அவரைப் பற்றிய செய்தியும், படமும் வெளியே வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அவருக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் விஷம் குடித்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அது போக போகத்தான் தெரியும்.
இந்த பெண் வாழ்நாள் முழுவதும் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாகதான் இருப்பார். சமுதாயத்தில் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். மற்றவர்கள் வேலை கொடுக்க கூட யோசிப்பார்கள். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- இதில் தவறு செய்ததாக லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:-
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயம் தெரிந்ததும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அரசு செயலாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டோம்.
அதில், எச்.ஐ.வி. ரத்தம் வழங்கியவர் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பும் ரத்தம் கொடுத்து இருந்தவர். அவருக்கு எச்.ஐ.வி. இருந்தது தெரிந்தும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து விட்டார்.
அதன் பிறகு அவரை தொடர்ந்து கண்காணிக்க முடியாமல் போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு நிரந்தரமாக இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் யார் யாரெல்லாம் கண்காணிக்க தவறினார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மாதவி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அவர் விரைவில் அறிக்கை தருவார். அதில் தவறு இழைத்தவர்கள் உயர்பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள், நர்சு என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
மு.க.ஸ்டாலின்:- இதில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் விஜயபாஸ்கர்:- விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். #MinisterVijayabaskar #HIVBlood

தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இனி இது போன்று தவறு ஏற்படாமல் இருக்க ரத்த பரிசோதனையை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய மருத்துவ கருவி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் ‘ஐ.டி. நாட்’ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்:- இதில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் விஜயபாஸ்கர்:- விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். #MinisterVijayabaskar #HIVBlood
பரங்கிமலை ரெயில் விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். #Parangimalai #trainaccident
சென்னை:
கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயிலில் பயணம் செய்த 5 பேர் ரெயில் பாதை இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்து உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் கே.ஏ.மனோகரன், விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்து முதல் கட்ட தகவல்களை திரட்டினார். விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடனும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை லக்னோவில் உள்ள ரெயில்வே தலைமை பாதுகாப்பு கமிஷனரிடம் அவர் தாக்கல் செய்தார்.
அதில் கே.ஏ.மனோகரன் கூறியிருப்பதாவது:-
பரங்கிமலை ரெயில் நிலையத் தில் பொறியியல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சரியில்லை. பயணிகள் பயணம் செய்த விதத்திலும் தவறு இருக்கிறது. இதனால் விபத்து நடந்துள்ளது. ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த பயணிகள், பக்கவாட்டு சுவற்றில் மோதி கீழே விழுந்தபோது மற்ற பயணிகளையும் பிடித்து இழுத்துள்ளனர்.
இந்த ரெயிலில் 1,168 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், சம்பவத்தன்று சுமார் 2 ஆயிரத்து 200 பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்று ரெயில்வே வணிகத்துறை கணக்கிட்டு உள்ளது.
ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்காக வேகம் குறைக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பயணிகள் ரெயில் பெட்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டு பயணம் செய்த காரணத்தால், இரண்டு ரெயில் பாதைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த விபத்து காரணமாக ரெயிலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பெட்டிகளில் மின் சாதனங்கள் சேதமடைந்த வகையில் ரூ.294 மட்டும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
விபத்துகளை தவிர்க்க பரிந்துரைகள்
வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அவர் தெரிவித்துள்ள பரிந்துரைகள் வருமாறு:-
* கூட்ட நேரங்களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரெயில்களின் இருக்கைகள் கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களில் இருப்பது போல் நீளவாக்கில் அமைக்க வேண்டும்.
* ரெயில் பாதைகளை கடப்பதாலும், ரெயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதாலும் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
* பிரதான ரெயில் நிலையங் களிலும், நடைபாதைகளிலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக் கவும், பயணிகள் ரெயில் பெட்டிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்கவும் ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
* படிகளில் பயணம் செய்பவர்களிடம் அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடுமையாக்கப்பட வேண்டும்.
* புறநகர் ரெயில்களில் தானாக கதவு மூடிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
* விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்த பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையான பயணிகள். அவர்களின் பாதுகாப்பு ரெயில்வேயின் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பேரிடர் ஒத்திகையின் போது கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான விவகாரம் தொடர்பாக மண்டல இணை இயக்குனர் கலா தயாரித்த அறிக்கை கலெக்டர் ஹரிஹரன் மூலமாக தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. #CoimbatoreStudent #Logeshwari
கோவை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் கல்வித்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலா மாணவி பலியான கலைமகள் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். கல்லூரி சார்பில் அரசு தரப்பில் எந்த அனுமதி பெறாமலும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்காமலும் தன்னிச்சையாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தது தெரிய வந்தது.
மண்டல இணை இயக்குனர் கலா தயாரித்த அறிக்கை கலெக்டர் ஹரிஹரன் மூலமாக தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தலைமை செயலாளர் மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.
கலைமகள் கல்லூரி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாணவி பலியானது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #CoimbatoreStudent #Logeshwari #MockTrainer #MockDrill #DisasterDrill
பேரிடர் ஒத்திகையின் போது கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் கல்வித்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலா மாணவி பலியான கலைமகள் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். கல்லூரி சார்பில் அரசு தரப்பில் எந்த அனுமதி பெறாமலும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்காமலும் தன்னிச்சையாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தது தெரிய வந்தது.
மண்டல இணை இயக்குனர் கலா தயாரித்த அறிக்கை கலெக்டர் ஹரிஹரன் மூலமாக தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தலைமை செயலாளர் மூலம் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும்.
கலைமகள் கல்லூரி கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாணவி பலியானது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #CoimbatoreStudent #Logeshwari #MockTrainer #MockDrill #DisasterDrill
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார். #Jallikattu
மதுரை:
ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது.
மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் இன்று 6-வது கட்ட விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் நடத்தினார். அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் விசாரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் இதுவரை 1,202 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 8 மாத விசாரணைக்கு பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். #Jallikattu

×

X